Wow!!! he is very cute and amazing talent....
உலகின் மிகப்பெரிய வித்தைக்காரன்-ஐயோ!!!!!
Hot Video News
November 24, 2020
Labels:
அனுபவம்,
ஆரோக்கியம்,
குரு
வேளாண்மை பஞ்சாங்கம்- 2018
Hot Video News
December 13, 2017
நம் கலாச்சாரத்தில் உருவான ஜோதிட நூல்கள் பெரும் பகுதி விவசாயம் சார்ந்த கருத்துக்களை கொண்டது. குறிப்பாக எப்பொழுது விவசாய பணி செய்ய வேண்டும் என்பதில் துவங்கி எவ்வகை பயிர்கள் லாபம் தரும் என்பது வரை குறிப்புக்கள் உண்டு. தமிழில் வருட பாடல் பாடிய இடைக்கடார் சித்தர் பாடல்களில் கூட இந்த வருடம் மழை பொழியுமா, வறட்சி நிலவுமா என்ற விவசாய குறிப்பை காணலாம். நம் நாடு விவசாய நாடு என்பதாலும் முன்காலத்தில் விவசாய பணிகள் மிக முக்கிய பணிகளாக இருந்ததும் காரணமாக இருக்கலாம்.ஆனால் தற்காலத்தில் ஜோதிடத்தின் விவசாய விதிகளை கவனமாக தவிர்த்துவிட்டு திருமணம், காது குத்து என நல்ல நேரம் பார்க்க பயன்படுத்துகிறோம். ஜோதிடம் என்பது மூட நம்பிக்கை அல்லது நம்பிக்கை என்ற விவாதம் தவிர்த்துவிட்டு பொதுவாக சொன்னால் ஜோதிடம் ஒரு வானிலை அறிவிக்கும் கருவியாக பயன்படுத்தலாம். தினசரி காலண்டரில் கூட ‘சந்திரனின் வடகோடு உயர மழை பெய்யும்’ என்ற வாசகம் காணலாம். அது போல நம் நன்மைக்கும் வானிலை அறிந்து வேளாண் செய்யும் வகையில் பஞ்சாங்கம் தயாரித்துள்ளேன்.
வேதகால வேளாண்மை என்ற கருத்தியலின் ஒரு பகுதி வேளாண் ஜோதிடம். தற்காலத்தில் பயோ டயனமிக் - உயிர் ஆற்றல் விவசாயம் என்ற பெயரில் பஞ்சாங்கம் மேலை நாட்டினரால் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. அதில் சந்திரனின் முழு நிலவு, அமாவாசை மட்டுமே கருத்தில் கொண்டு 15 நாட்கள் வரும் திதியின் அடிப்படையிலும் சில ஜோதிட கருத்துக்களுடனு அமைகிறது. ஆனால் நமது பஞ்சாங்கத்தில் நாள், வாரம், நட்சத்திரம், யோகம் மற்றும் திதி ஆகிய பஞ்ச அங்கங்களை பயன்படுத்தும் முறைகளை நம் சாஸ்திரத்தின் அடிப்படையில் கொடுத்துள்ளேன்.
கம்ப்யூட்டர் யுகத்தில் பஞ்சாங்கம் வைத்து விவசாயமா என சிந்திப்பவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். உயிராற்றல் விவசாயம் மற்றும் மேலை நாட்டு பஞ்சாங்கம் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தால் ஆதரவு பெற்ற ஒன்று. மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
வெளிநாட்டுக்காரர்கள் சொன்னால் தானே நாம் நம்புவோம்? தற்சமயம் ப்ரணவ பீடத்தில் வேளாண்மை பஞ்சாங்கம் அமெரிக்க நாடுகள், அஸ்திரேலியா , பூட்டாண் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ப்ரணவ பீடத்தின் வேளாண் பஞ்சாங்கம் சாஸ்திர ரீதியாக தயாரிக்கப்பட்டு எதிர்காலத்தில் உயிராற்றல் விவசாயம் பரவலாகும் பொழுது அனைவருக்கும் கிடைக்க செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.
2007ஆம் ஆண்டு முதல் தயாரித்து வந்தாலும் விவசாயிகளுக்கு மட்டுமே தனிச்சுற்றாக அனுப்பி வந்தோம். தற்சமயம் பலர் விவசாய ஆர்வலர்களாக இருக்கிறார்கள், தங்கள் வீட்டின் மாடியில் பயிர் செய்கிறார்கள். அனைவருக்கும் பயன்படும் வகையில் இந்த வருட (ஹேவிளம்பி -விளம்பி) வேளாண் பஞ்சாங்கத்தை இலவச டவுன்லோடு செய்யுமாறு வழங்குகிறோம்.
வேளாண்மை பஞ்சாங்கம் 2018
இலவச வேளாண்மை பஞ்சாங்கத்தை அனைவருக்கும் கொண்டு செல்ல நீங்களும் ஒரு கருவியாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.
வேளாண்மை நமது உயிர் ஆதாரம்
வேதகால வேளாண்மை பற்றிய எழுதிய கட்டுரைகளை படிக்க - வேதகால வேளாண்மை
Labels:
பஞ்சாங்கம்,
வேதகால வாழ்க்கை,
வேதத்தின் கண்,
வேளண்மை,
ஜோதிட ஆய்வு
உண்மையான பிக் பாஸ்...!
Hot Video News
July 05, 2017
தெருவெல்லாம் விளம்பரம்....
ஜனங்கள் தினமும் பார்த்து இணையத்தில் விவாதிக்கிறார்கள்.
ஒரு வீட்டில் முப்பது கேமராக்களுடன் சிலர் வாழும் வாழ்க்கையை எட்டிப்பார்க்கிறார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால் ஏதோ அந்த பதிநான்கு நபர்கள் தான் கேமரா கண்காணிப்பில் வாழ்வது போலவும் நாம் சுகந்திரமாக இருப்பதா நினைத்து தினமும் அவர்களின் வாழ்க்கையை பார்த்து சிரிக்கிறோம்.
உண்மையில் நாம் தான் உலகம் என்கிற வீட்டின் உள்ளே ஆயிரம் ஆயிரம் கேமராக்கள் கண்காணிப்பில் வாழ்கிறோம்.
நம் பிக் பாஸ் ஒருவரே. அவர் நம்மை வீட்டுக்குள் அனுப்பிவிட்டு கேமராக்கள் மூலம் பேசுகிறார். நம் தவறை சுட்டிக்காட்டி திருத்துகிறார். வீட்டின் உள்ளே வாழும் சிலர் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள் இன்னும் சிலரோ அழுகிறார்கள்.
வேறு சிலர் (இறைவனை நோக்கி) கேமரா முன் நின்று தங்கள் தேவையை மன்றாடுகிறார்கள்.
பிக்பாஸில் 100 நாட்கள், உண்மையான பிக்பாஸில் 100 ஆண்டுகள்..!
இவையெல்லாம் என் கற்பனை அல்ல. திருமூலர் மிகவும் எளிமையாக திருமந்திரத்தில் இதை கூறுகிறார்.
கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார்
கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களஒழிந் தாரே
-2067
விளக்கம் :
கண்காணிப்பவர்கள் இல்லை என சிலர் கள்ளம் பல செய்கிறார்கள்.
உண்மையில் கண்காணிப்பவர் இல்லை என்ற இடமே இல்லை என உணருங்கள்.
கண்காணிப்பவராக எங்கம் கலந்து நின்றவனை நீங்கள் கண்காணிக்க துவங்கினால்
கள்ளம் ஒழிந்து உண்மையை நோக்கி பயணிப்பீர்கள்.
மேலும் திருமூலர்....
கண்காணி யாகவே கையகத் தேயெழும்
கண்காணி யாகக் கருத்துள் இருந்திடும்
கண்காணி யாகக் கலந்து வழிசெய்யும்
கண்காணி யாகிய காதலன் தானே.
- 2072
என முவ்வாயிரம் ஆண்டுகளுக்கு முன் நமது உண்மையான பிக்பாஸை பற்றி சொல்லுகிறார்.
இனிமேலாவது அந்த வீட்டை விட்டு வெளியேறும் முன் ஏதேனும் சிறப்பான காரியம் செய்துவிட்டு விடைபெறுங்கள். அல்லது கண்காணியை கடைசி வரை கண்காணித்து அவரிடம் பரிசு பெருங்கள்..!
நன்றி : திருமதி. அமுதா - சிங்கப்பூர்

காசி ஆன்மீக பயணம்
Hot Video News
May 31, 2017
காசி பயண விபரங்கள்
காசி ஆன்மீக பயணம் 22 முதல் 26 ஜூலை வரை நடைபெறும்.
22ஆம் தேதி இரவு 7 மணிக்கு முன் காசியை வந்து அடைதல்.
இரவு உணவு மற்றும் காசி பயண குறிப்புகள்
23ஆம் தேதி காலை 6:00 மணிக்கு கங்கா ஸ்நானம் மற்றும் ச்ரார்தம்.
காலை 8 மணிக்கு விஸ்வநாதர் தரிசனம், அன்னபூரணி மற்றும் விசாலட்சி தரிசனம்.
மதியம் 1 மணிக்கு காலபைரவர் தரிசனம் , விடுதி வந்து அடைந்தல்.
மாலை 5 மணிக்கு கங்கையில் படகு பயணம் மற்றும் மாலை 6:30க்கு கங்கா ஆரத்தி
இரவு 7 மணிக்கு மணிகர்ணிக்கை மயானம் செல்லுதல் - தியானம்
இரவு 8 மணிக்கு இரவு உணவு
24ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு - கயா. விஷ்ணு கயா, புத்தகயா சென்று ச்ரார்தம் செய்து திரும்புதல்
இரவு 10 மணி காசி வந்து அடைதல்
25ஆம் தேதி காலை 6 மணிக்கு அலஹாபாத் செல்லுதல், சங்கமம் நதி நீராடல், விந்தியாச்சல் சக்தி பீடம்
இரவு 9 மணிக்கு காசி வந்து அடைதல்
26ஆம் தேதி காலை 6 மணிக்கு காசி கங்கா ஸ்நானம் - விடைபெறுதல்.
----------------------------------------------------
வீட்டிலிருந்து காசி வந்து அடைதல் மற்றும் திரும்ப செல்லும் பயண செலவு உங்களை சார்ந்தது.
விமான நிலையம் அல்லது ரயில் நிலையத்திலிருந்து அழைத்து வரும் இலவச சேவை உள்ளது.
Labels:
ஆன்மீக பயணம்,
காசி