PropellerAds

உண்மையான பிக் பாஸ்...!

0:00 / 05:18
தெருவெல்லாம் விளம்பரம்....
ஜனங்கள் தினமும் பார்த்து இணையத்தில் விவாதிக்கிறார்கள்.

ஒரு வீட்டில் முப்பது கேமராக்களுடன் சிலர் வாழும் வாழ்க்கையை எட்டிப்பார்க்கிறார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால் ஏதோ அந்த பதிநான்கு நபர்கள் தான் கேமரா கண்காணிப்பில் வாழ்வது போலவும் நாம் சுகந்திரமாக இருப்பதா நினைத்து தினமும் அவர்களின் வாழ்க்கையை பார்த்து சிரிக்கிறோம்.

உண்மையில் நாம் தான் உலகம் என்கிற வீட்டின் உள்ளே ஆயிரம் ஆயிரம் கேமராக்கள் கண்காணிப்பில் வாழ்கிறோம்.

நம் பிக் பாஸ் ஒருவரே. அவர் நம்மை வீட்டுக்குள் அனுப்பிவிட்டு கேமராக்கள் மூலம் பேசுகிறார். நம் தவறை சுட்டிக்காட்டி திருத்துகிறார். வீட்டின் உள்ளே வாழும் சிலர் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள் இன்னும் சிலரோ அழுகிறார்கள்.

வேறு சிலர் (இறைவனை நோக்கி) கேமரா முன் நின்று தங்கள் தேவையை மன்றாடுகிறார்கள்.
பிக்பாஸில் 100 நாட்கள், உண்மையான பிக்பாஸில் 100 ஆண்டுகள்..!


இவையெல்லாம் என் கற்பனை அல்ல. திருமூலர் மிகவும் எளிமையாக திருமந்திரத்தில் இதை கூறுகிறார்.

கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார்
கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களஒழிந் தாரே
                -2067


விளக்கம் :
கண்காணிப்பவர்கள் இல்லை என சிலர் கள்ளம் பல செய்கிறார்கள்.
உண்மையில் கண்காணிப்பவர் இல்லை என்ற இடமே இல்லை என உணருங்கள்.
கண்காணிப்பவராக எங்கம் கலந்து நின்றவனை நீங்கள் கண்காணிக்க துவங்கினால்
கள்ளம் ஒழிந்து உண்மையை நோக்கி பயணிப்பீர்கள்.


மேலும் திருமூலர்....

கண்காணி யாகவே கையகத் தேயெழும்
கண்காணி யாகக் கருத்துள் இருந்திடும்
கண்காணி யாகக் கலந்து வழிசெய்யும்
கண்காணி யாகிய காதலன் தானே.
                - 2072

என முவ்வாயிரம் ஆண்டுகளுக்கு முன் நமது உண்மையான பிக்பாஸை பற்றி சொல்லுகிறார்.
இனிமேலாவது அந்த வீட்டை விட்டு வெளியேறும் முன் ஏதேனும் சிறப்பான காரியம் செய்துவிட்டு விடைபெறுங்கள். அல்லது கண்காணியை கடைசி வரை கண்காணித்து அவரிடம் பரிசு பெருங்கள்..!

நன்றி : திருமதி. அமுதா - சிங்கப்பூர்
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. Amazing Videos - All Rights Reserved
Template Created by ThemeXpose