0:00 / 05:18
யோக சாஸ்திரத்தின் மூலமாக சிவன் இங்கே நிறுவப்படுகிறார். இன்னும் சில தினங்களில் வரலாறு உருவாக்கப்பட உள்ளது. ஆதி யோகி சிவன் அவர் தான் அனைவருக்கும் விழிப்புணர்வை கொடுத்தவர் என கதை சொல்லப்படுகிறது. சப்த ரிஷிகள் அவரிடமிருந்து பெற்ற ஞானத்தை உலகிற்கு சொன்னார்கள் என கதை விரிவடைகிறது.
எது வேண்டுமானாலும் சொல்லுங்கள். உங்கள் கதையை மெருகேற்றுங்கள். உங்கள் செயல் எத்தகையதாக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. ஆனால் யோக பாரம்பரியத்தின் வரலாற்றை மாற்றி அமைக்க முயன்றாலோ களங்கப்படுத்த நினைத்தாலோ என்னால் கடந்து போக முடியாது...!
இங்கே சில கேள்விகள் எழுப்புகிறேன். அது மக்களின் விழிப்புணர்வை தூண்டட்டும். இந்த கேள்விகளுக்கு ’நீங்கள்’ தயவு செய்து பதில் சொல்ல வேண்டாம். உண்மையான யோக சாஸ்திரத்தின் விதையான முதல் குரு பதில் சொல்வார்... பொறுத்திருப்போம்!
1) சிவன் தான் ஆதி குருவாக யோக சாஸ்திரத்தை உலகுக்கு அளித்தார் என்றால், இந்தியாவில் உள்ள சிவன் கோவில்களில் ஏன் யோகா சொல்லித்தரப்படுவதில்லை?
2) 108 வகையான நாட்டிய முத்திரைகளை காண்பிக்கும் வடிவம், நடராஜ ரூபமாக இருக்கும் சிவனை காண்கிறோம். ஆனால் எங்கும் யோகாசனம், ப்ராணாயாமம் செய்யும் சிவனை கண்டதில்லை. இவர் வேறு யோக சிவன் வேறா?
3) நீங்கள் வடிவமைத்திருக்கும் ஆதி யோகி உண்மையான யோக பாரம்பரியம் என்றால் இந்தியாவில் உள்ள பாரம்பரியம் மிக்க யோக ஆசிரமங்களில் ஏன் ஆதி யோகி வடிவம் சிறிய அளவில் கூட இல்லை?
4) விஞ்ஞான பைரவ தந்த்ரா என்ற முதல் யோக நூல் தியானத்தை 112 வகையாக கற்றுக்கொடுக்கிறது. அதன் அடிப்படையில் 112 ஆதார சக்கரங்களாக வைத்துக் கொண்டு பெரிய முகத்தை செய்திருக்கிறார்கள். அதில் உள்ள பைரவர் தான் ஆதி குருவா? பைரவர் தான் சிவனா? இல்லை வேறு வேறா?
5) அஷ்டாங்க யோகத்தில் முக்கியமாக சத்யா (உண்மை), ஆஸ்தேயா(ஆடம்பரம் இல்லாத எளிமை) ஆகிய யாம நியமங்களை அனுசரித்துதான் இந்த யோகத்தின் ஆதி குருவின் முகம் அமைக்கப்படுகிறதா?
யோக வரலாற்றை மறைத்து திருத்தி எழுத முயற்சி செய்பவர்களுக்கு என் கண்டனங்கள்.
மக்களுக்கு யோக பாரம்பரியத்தை பற்றிய தவறான விழிப்புணர்வு அளிப்பதற்கும் கண்டங்களை பதிவு செய்கிறேன்.

0 comments:
Post a Comment